கூடுதல் பணம் கேட்டு தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள் போராட்டம்

2
9995

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சேகர குருக்கள் இறை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அருகிலுள்ள நெல்லை திருமண்டலத்தில் ஒவ்வொரு சேகர குருவுக்கும் மாதம்தோறும் ரூ. 60,000 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி சேகர குருக்களுக்கு அதில் பாதி மதிப்பிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது.

நெல்லை சேகர குருக்களுக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் வழங்க கோரி தூத்துக்குடி சேகர குழுக்கள் சாத்வீகப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த மாதம் தங்களது ஊதியத்தை பெறாமல் புறக்கணித்து அவர்கள் போராடி வருகின்றனர்.

2 COMMENTS

  1. உண்மையான செய்தி ஊடகம் என பெயர் வைத்து கொண்டு இப்படி பொய்யான தகவல்களை பரப்புவது நியாயமா??? இந்த புகைப்படத்தில் ஒரு தூத்துக்குடி குருமாரை அடையாளம் காட்ட முடியுமா??

    • படத்தை சி எஸ் ஐ சேகரக் குருக்கள் என்ற) அடையாளத்துக்காக வைத்தூள்ளோம். ஆயினும், ‘மாதிரி படம்’ என்று குறிப்பிடாதது தவறுதான். மற்றபடி, சேகர குருக்களின் ஊதிய உயர்வு கோரிக்கை, நேற்று வரை ஊதியம் பெறாமை ஆகியவை உண்மைதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here