கள்ளச்சாராயம் அதிகரிப்பால் டாஸ்மாக் திறப்பு: சொல்வது உடன்பிறப்பல்ல, தோழர்!

0
1176

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :

மத்திய அரசு தடுப்பூசி , ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் மாநிலங்களிடையே பாகுபாடு பார்க்கபடுகிறது , பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் தடுப்பூசி , ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்துள்ளது, உச்சநீதிமன்றம் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாமல் அவர்களே தடுப்பூசி ஆக்சிஜன் ஒதுக்க குழு அமைத்துள்ளது, தடுப்பூசி, ஆக்சிஜன் ஒதுக்கீடு விவகாரங்களில் மத்திய அரசை நோக்கி உயர்நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் 66ரூபாயாக இருந்தது தற்போது கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்தபோதிலும், பெட்ரோல் விலை 100ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையினர் மனசாட்சியின்றி செயல்படுகின்றனர். சில தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு புகார் அளித்துள்ளோம்.

எடப்பாடி அரசு போல அடிமையாக இருந்தால் தான் தமிழகத்தின் தேவை நிறைவேற்றப்படும் என்பது போல தமிழக பாஜக கூறுகிறது. புதுச்சேரியில் மதுபானகடைகள் திறக்கப்பட்டதாலும், ஊரடங்கை பயன்படுத்தி கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டதாலும், அதை தடுக்கவே தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறையினர் உதவியாக இருந்துள்ளனர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here