பழங்குடி பட்டியலில் மீனவர்களை சேர்க்க நாடாளுமன்ற முற்றுகை: பூலான்தேவி தங்கை

0
941

மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி மீனவ மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தி அரசியல் எழுச்சி பிரச்சாரம் தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இன்று நடந்தது.
பூலாந்தேவியின் மூத்த சகோதரியும், ஏகலைவன் சேனாவின் தேசிய தலைவியுமான ருக்குமணி தேவி, சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி பாலபிரஜாபதி, பகுஜன் இயக்க பிரமுகர் ஜீவன் குமார் ஆகியோர் பேசினர்.
ருக்குமணி தேவி பேசுகையில், ‘ மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி, வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி பாராளுமன்றம் இருக்கும் ஜந்தர்மந்தரில் பெரிய முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை கலைய மாட்டோம். அதற்காக உயிரை கொடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here