நாய் விழுங்கிய முகக் கவசத்தை வாய் மூலம் எடுத்த பலே மருத்துவர்

0
1101

மதுரை பழங்காநத்தம் அருகேயுள்ள நேருநகர் பகுதியை சேர்ந்த குரு என்பவரின் வீட்டில் வளர்ந்துவந்த இரண்டரை வயதுடைய புருனோ என்ற லேப்ரடார் இன நாயானது கடந்த 9நாட்களாக உடல்நலம் குன்றிய நிலையில் உணவு சாப்பிடாமல் சோர்வாக இருந்துள்ளது. இதனையடுத்து கால்நடை மருத்துவரான கூடல்புதூர் பகுதியை சேர்ந்த மெர்லின்ராஜ் என்பவரை தொடர்புகொண்டுள்ளார்.

இதனையடுத்து ஆனையூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவருக்கு சொந்தமான கால்நடை மருத்துவமனையில் நாயின் உடலை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது நாயின் வயிற்றில் மனிதர்கள் பயன்படுத்தகூடிய துணியால் ஆன முக கவசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் உணவுக்குழாயக்கு உணவு செல்லாமல் நாய் உணவு உண்ண முடியாத நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துவர்

வாய்வழி வெளியேற்ற சிகிச்சை மேற்கொண்டார். குளூகோஸ் வாய்வழியாக செலுத்தபட்டு அதன் மூலமாக முக கவசம் முழுவதுமாக அகற்றப்பட்டது. இதனையடுத்து நாய் தற்போது மீண்டும் நலமாக உள்ளது.

மனிதர்களின் பாதுகாப்பிற்காக அணியும் முக கவசங்களை அலட்சியமாக சாலைகளில் வீசி செல்வதால் நாய் போன்ற வளர்ப்பு பிராணி

விழுங்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என்பதால் மனிதர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர் கோரிக்கை விடுத்தா ர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here