பள்ளிக்கல்வித்துறையில் மூன்று இயக்குநர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் முறைசாரா கல்வி இயக்குனர் சேதுராம வர்மா, தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.