கொடுக்கல் வாங்கலில் கூட்டாளியே தீர்த்துக்கட்டினார் சாத்தை வாலிபர் கொலைமர்மம்

0
4745

சாத்தான்குளத்தில் நேற்று பைக்கில் வந்த போது வழிமறித்து வெட்டிக்கொல்லப்பட்ட வாலிபர் மார்ட்டின் கொலையில் அவரது பழைய நண்பர் பாபு சுல்தானும் கூட்டாளிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

முதல் தகவல் அறிக்கை தகவல் வருமாறு:

மார்ட்டினுக்கும் மேல சாத்தான்குளத்தை சேர்ந்த செந்தில் என்ற பெட்ரோல் செந்திலுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஓடைக் கார தெரு தெருவில் மிட்டாய் கடை வைத்து வரும் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மைதீன் மீரான் என்பவர் மார்ட்டினிடம் பணம் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டாமல் இருந்துள்ளார்.

மீரான் மைதீனுக்கு ஆதரவாக பெட்ரோல் செந்திலும் மார்ட்டினின் பழைய கூட்டாளி பாபு சுல்தானும் களமிரங்கியுள்ளனர். அவர்களின் ஏற்பாட்டின் பேரில் மார்ட்டின் மீது மீரான் மைதீன் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமுதல் மார்ட்டினுக்கும் பாபு சுல்தான் மற்றும் மீரான் மைதீனுக்கும் பகை இருந்துவந்தது. அதனால் எப்போதும் மார்ட்டின் எச்சரிக்கையாக தனது தம்பி மணிகண்டனுடனேயே வெளியில் சென்றார். நேற்றிரவு 7.15 மணிக்கு தலைவலி மாத்திரை வாங்குவதற்காக மார்ட்டினும், பின்னால் அவரது தம்பி மணிகண்டனும் கடைத்தெருவிற்கு சென்றனர். பள்ளிவாசல் முன்பு சென்றபோது பாபு சுல்தான், மைதின் மீரான் உட்பட 10 பேர் வழிமறித்து தலையிலும் உடலிலும் அரிவாளால் வெட்டியுள்ளனர். நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளனர்.

மணிகண்டன் மார்ட்டினை காரில் ஏற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது மருத்துவர் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி, பாபு சுல்தான், மைதின் மீரான் மற்றும் புகாரி, ரசுருதின், பிலால், பாரிஸ், காதர், சிந்தா, மகதுன், செந்தில் (எ) பெட்ரோல்செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் விசாரித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here