தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இதனை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் திரளான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் கோவிலில் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.