சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கல்லணியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து களமிறங்கிய காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு பிரிவு போலீசார் கல்லனி கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது டிராக்டரில் சவுடு மண் அள்ளிய வெற்றிவேல் (45) என்பவரை கைது செய்தனர். டிராக்டரை பறிமுதல் செய்து இளையான்குடி காவல்துறையினர் டிராக்டர் உரிமையாளர் கர்ணன் மற்றும் மணல் அள்ளிய வெற்றிவேல் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.














