தேர்தல் ஆணையராகும் யோகி ஆதித்யநாத் நண்பர்

0
334

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டேவை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
தலைமைத் தோ்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி ஓய்வுபெற்றார். இதனையடுத்து, தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தலைமைத் தோ்தல் ஆணையராகப் பதவி உயா்வு பெற்றாா்.

இதனால் ஒரு தோ்தல் ஆணையா் பதவி காலியானது. அந்த இடத்துக்கு, தற்போது அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளாா்.
வரும் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரை அவா் தோ்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா். இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை நேற்று வெளியிட்டது.

இவர் 1984ஆம் ஆண்டைய உத்தரப் பிரதேச பிரிவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். உத்தர பிரதேச தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளாா். அனைத்தையும் விட உத்தரப் பிரதேச முதல்வர் யோகியின் நண்பராக கருதப்படுகிறார்.

அடுத்த ஆண்டு உத்திர பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here