பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஜ் நகரில் வரும் ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதி வரை ஜி7 நாடுகளின் 45-ஆவது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க வேண்டுமென்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் பிரான்ஸ் செல்லவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் செல்லவுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், பக்ரைனிற்கும் இம்மாதம் பிரதமர் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.