திருவைகுண்டம் அருகே உள்ள வெல்லூரை சேர்ந்த இசக்கி மகன் இசக்கி பாண்டி (58), விவசாயி. இவர் நேற்று தனது உறவினரை பார்ப்பதற்கு சாத்தான்குளம் போவதாக கூறிவிட்டுச் சென்றார். இந்நிலையில் அவர் பேய்குளம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் அருகில் உள்ள குளம் ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பாளை அரசு மருத்துவமனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் இதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசக்கி பாண்டியன் உடலில் காயங்கள் இருந்ததாகவும், யாரோ அவரை தாக்கி குளத்தங்கரையில் போட்டு விட்டு சென்றதாகவும் உறவினர்கள் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.









