மதுரை அருகே கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு

0
500

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி
கொட்டமடக்கிகண்மாய்கரையில் 36அடிஉயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவில்
உள்ளது.

இந்த கோவிலில் விநாயகர், காலபைரவர், புத்தர், வள்ளலார்,
சாயிபாபா, லிங்கம், அம்மன் என்றும் திசைக்கு 8 வகையான லிங்கங்கள் கற்சிலை
மூலவர்களாக உள்ளன. இதில் லிங்கத்திற்குள் குகைவறையில் 18சித்தர்களும்
அருள்பாலித்துவருகின்றனர்.

மேலும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன்,
நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியசிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டு
உற்சவராக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8மணிக்கு
கோவில் நிர்வாகி கோபிநாத் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டிவிட்டு
வீட்டிற்கு சென்றார். இதில் கோவில் உள்புறம் உள்ள திருமணமண்டபத்தில்
காவல்பணிசெய்யும் ராமையன்பட்டியை சேர்ந்த திருவேங்கடம் அங்கு
தங்கிகொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு 11மணிக்கு முககவசம் அணிந்த
30வயது மதிக்கதக்க 7மர்மமனிதர்கள் கோவிலின் காம்பவுண்டு சுவரில் இருந்து
ஏறி உள்ளே குதித்துவந்து பூட்டை உடைத்து ஒரு பகுதியிலிருந்த 3அடிஉயரமுள்ள
நடராஜர் சிலை 1, 1அடிஉயரநடராஜர்சிலை 1, 2அரைஉயரமுள்ள சிவகாமி சிலை
1,1அரைஅடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை 1 ஆகிய ஐம்பொன்பித்தளையால்
செய்யப்பட்ட உற்சவர் சிலைகளை திருடி சாக்குமூட்டையில் போட்டு
கட்டிக்கொண்டு தப்பிசென்றனர்.

அதன்பின் 3மணிக்கு திருவேங்கடம் எழுந்து
வந்து கோவிலை சுற்றிபார்த்தபோது பூட்டை உடைக்கப்பட்டு சிலைகள்
திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து கோவில் நிர்வாகி கோபிநாத்திற்கு
தகவல் கொடுத்தார். அதன்மதிப்பு ரூ.80 ஆயிரமாகும்.

இது சம்மந்தமாக
தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின்,
சப்இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு
சி.சி.டி.விகேமிராவில் திருடுசம்பவ காட்சிகளை வைத்து வழக்குபதிவுசெய்து
விசாரித்து மர்மமனிதர்களை வலைவீசிதேடிவருகிறார். மேலும் தடயஅறிவியல்
நிபுநர்கள் கைரேகைகளை பதிவுசெய்தனர். இந்த திருட்டுசம்பவத்தால்
இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here