குலசேகரத்தில் கோழிகளை விழுங்கும் மலை பாம்பு

0
1250
  1. குலசேகரம் குறக்குடி பிலாங்காலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மாயமாகி வந்தன. பொதுமக்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது வீட்டிக்கு செல்லும்போது சாலையை கடந்து சுமார் 8 அடி நீள மலை பாம்பு வருவதை பார்த்து சத்தம் போட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மலைபாம்பு அந்த பகுதியில் உள்ள வடிகாலில் புகுந்து மறைந்தது.

இது குறித்து அவர்கள் குலசேகரம் வனத்துறையினருக்கு போனில் தகவல் தெரிவித்தனர். பாம்பை பிடிக்க வனத்துறையினர் வரவில்லை. இதையடுத்து பொதுமக்கள், மீன்பிடிக்கும் வலைகளை வடிகாலில் மூடி பாம்பு வராத வகையில் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ளனர். என்றாலும் அப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட பயப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் அப்பகுதியில் பதுங்கி உள்ள மலைபாம்பை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here