அதே ஆஸ்பத்திரி அதே கூடுதல் கட்டணப் புகார்: கலெக்டரிடம் முறையிட்டும் ‘நோ ரெஸ்பான்ஸ்’

0
1241

கொரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிப்பதாக கறாராக கூறி, 15,000 ஆக இருந்த கட்டணத்தை 35,000 ஆக அரசு உயர்த்தியது. ஆனால் அதற்குள்ளும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் ஆசை அடங்கவில்லை. ஆயிரம், லட்சம் என கறந்து கொண்டே இருக்கிறார்கள்.


கோவை சிட்ரா பகுதியை சேர்ந்த மோகன்குமார்(54) கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு புறவழி சாலையில் உள்ள மனு மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி அனுமதிக்கபட்டார்.

முதல் நாள் சிகிச்சை கட்டணமாக 60 ஆயிரம் ரூபாய் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் 40 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிர்ணயம் செய்யபட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக குற்றம் சாட்டி உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி அவரது சகோதரர் மகாலிங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, சிகிச்சை பெற்று வந்தவரின் ஆவணங்களை பார்த்த பின்னரே இது குறித்து சொல்ல முடியும் என அலட்சியமாக தெரிவித்தனர்.


கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றசாட்டுகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், அதுவும் கடந்த சில தினங்களுக்கு முன் இதே மருத்துவமனை மீது புகார் அளிக்கபட்டு அது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. இரண்டு புகார்கள் இருந்தும்இன்னமும் தீவிர நடவடிக்கை அரசு சார்பில் இல்லை என நோயாளியின் உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here