டில்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் வெண்டிலேட்டா்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 888 கிலோ எடையுடைய மருத்துவ பொருட்களின் பாா்சல்கள் சென்னை பழைய விமானநிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
விமானப்படையினா் கண்காணிப்பில் அந்த பாா்சல்களை ஏா்இந்தியா லோடா்கள் விமானத்திலிருந்து இறக்கி வைத்தனா்.அதன்பின்பு சென்னை விமானநிலைய அதிகாரிகள் மருத்துவ பாா்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா் அவா்கள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.











