பொதிகை மலையில் யானை, சிறுத்தை மர்ம இறப்பு- பாதுகாப்பு இயக்கம் குற்றச்சாட்டு

0
415

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க புரத்தில் பொதிகை மலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் இயற்கை வளங்களை காப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் வனத்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கண்டனஆர்ப்பாட்டம் நடைபெறறது.

பொதிகைமலை பாதுகாப்பு இயக்கத் தலைவர் கரும்புலி கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், தமிழ் தேச தன்னுரிமை கட்சித்தலைவர் வியனரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பொதிகை மலை பாதுகாப்பின்றி இருப்பதாகவும் இங்குள்ள விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் வனத்துறையினரின் உதவியோடே அழிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

முண்டந்துறை பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் பாண்டிச்சேரி வரை கடத்தப்பட்டது. புகார் எழுந்த பின்பு வனத்துறை அதிகாரிகள் குழுவாக சென்று கடத்திய மரங்களை கைப்பற்றி அபராதம் விதித்தனர் . ஆனால், நான்கு செக்போஸ்ட்களை கடந்து மரங்கள் கடத்தப்படுவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் இதே சரகத்தில் பணி புரிவதாகவும் குற்றச்சாட்டை கூறினர்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் பணிபுரியும் அரசின் விதிமுறைகள் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒரே இடத்தில் அதிகாரிகள் பணி பெறக்கூடாது என்ற அரசின் விதிமுறைகளை மீறி இந்த களக்காடு முண்டந்துறை சரணாலயத்தில் மட்டும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வனச்சரகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒரே இடத்தில் பணிபுரிவதாக குற்றஞ்சாட்டினர்.

யானைகள் மற்றும் சிறுத்தைகள் இறந்ததற்கான காரணங்களை உயரதிகாரிகளை வைத்து நீதிவிசாரணை வேண்டும் . 26 சந்தன மரங்களை வெட்டியவர்கள் மீதும், துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

மத்தளம்பாறை அருகே இறந்து கிடந்த சிறுத்தை தலை மற்றும் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?மாஞ்சோலையில் பெண் வன ஊழியரை பலாத்கார முயற்சி செய்த. வனத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டது எனவும் விசாகா விசாரணை கமிட்டி அறிக்கை பெற்று நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என்று கேள்வியை முன் வைத்தனர்

மாஞ்சோலைகக்குள் பொதுமக்களை அரசு பேருந்தில் அனுமதிக்காமல் அன்னபூரணி சொசைட்டி என்று 350 ரூபாய் அநியாய வசூல் செய்வதாக கூறினர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here