மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்நிலையத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக சோழவந்தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த ரயிலில் வந்தவர்களை சோதனையிட்டபோது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் மதுபான பெட்டிகளை ரயில்நிலையத்திலேயே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார்.

அவரை போலீசார் மடக்கிபிடித்து விசாரணை செய்தபோது கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை மதுரைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில், மதுபாட்டில்களை கடத்தி வந்தது நடுமுதலைக்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(30) என்பது தெரிந்தது.
அவரை கைது செய்த சோழவந்தான் போலீசார் அவரிடமிருந்து 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.














