சுமார் 100 கோடி ரூபாயை விழுங்கியிருக்கும் நெல்லை புதிய, பாளை பஸ் நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன. காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறந்துவைக்கிறார். புதிய பேருந்து நிலையத்தில் நின்ற கார்பனை விழுங்கும் மரங்கள் வெட்டப்பட்டு, பிளாட்பாரம் தோறும் சிறு புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. 4 பிளாட்பாரங்கள் 6 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள் அடித்துக்கொள்ளாமல் மேல் வாடகை வாங்க மேல் மாடி வணிக கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதுபோக, அவசரமாக வந்து போகும் பேருந்து நிலையத்தில் பொழுதுபோக்கு பூங்கா, பொம்மைகள், செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. ஏதோ குழந்தைகளுக்கு வேடிக்கை காட்ட உதவும். இன்று முதல் மிதிவண்டி நிறுத்த இடம் கிடைக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஓய்வறைகள் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும். 15 மாதங்களாக பயணிகள் பட்ட பாட்டுக்கு செய்த செலவு ஈடாகுமா என்று தெரியவில்லை.







