கோவை செல்வபுரம் மாசாணி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் பாண்டியன் இவரது மனைவி வாசுகி( 54 )மற்றும் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் கமலவேணி ஆகிய இருவரும் நேற்று இரவு பேரூர் மெயின் ரோட்டில் உள்ள ஒயின் ஷாப் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர்கள் ஆன அப்சல் மற்றும் கண்மணி ஆகியோரை பார்த்து கமலவேணி அழைத்துச் சென்று கொண்டிருந்த நாய் குரைக்கத் தொடங்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் நாயை காலால் எட்டி உதைத்தனர். இதைப்பார்த்த வாசுகி அந்த வாலிபர்களை சத்தம் போட்டார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் சமாதானப்படுத்திய தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்ற கண்மணி தனது நண்பர் புவியரசுவை அழைத்துக் கொண்டு மீண்டும் வந்து வாசுகியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டு எடுத்து கொளுத்தி வாசுகியின் மீது எறிந்தார். பெட்ரோல் வெடிகுண்டு தன் மேல் படாமல் இருக்க அங்கிருந்து வாசுகி விலகி ஓடினார். அந்த பெட்ரோல் வெடிகுண்டு வாசுகியின் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் பட்டு வெடித்தது.
இதையடுத்து வாசுகி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார் புகாரின்பரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் வாசுகி மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கமலவேணி அவரிடம் தகராறில் ஈடுபட்டு, பின்னர் மீண்டும் வந்து பெட்ரோல் குண்டு வீசியதாக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த வணங்காமுடி என்பவரின் மகன் புவியரசு (19 )மற்றும் அவரது நண்பன் செல்வபுரம் சாஸ்தா நகரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகன் கண்மணி(17) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.













