கொரோனாவுக்கு ஹோமியோபதியை பயன்படுத்துக: மருந்தை கொடுத்து அமைச்சரிடம் மனு

0
590

தமிழ்நாடு ரெட்டியார்நலசங்கம் சார்பாக ஆர்சனிக்ஆல்பம் 30 இலவசமருந்து குப்பிகளை 5அமைச்சர் மூர்த்தியிடம் வழங்கிவிட்டு, ஹோமியோபதி டாக்டர் பொன்யாழினிபாலாஜி
கோரிக்கை மனுவும் கொடுத்தார். மனுவில் கூறியிருப்பதாவது:


மாநிலத்திலேயே முதல்முறையாக திருமங்கலம் பகுதியில் ஹோமியோபதி மருந்துகள் மூலம்
சிகிச்சையளிக்கும் கோவிட் கவனிப்பு மையங்களை திறந்து வைத்து
பெருமைசேர்த்தற்கு நன்றி. கடந்த ஆண்டு முதல்கட்ட கொரோனா அலையின் போது மத்திய, மாநிலஅரசு, ஆயுஷ் அமைச்சகம் ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதிமருந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக அறிவித்தது.

தற்போது, இரண்டாவது அலையின்போதும் எங்கள் பகுதியில்
அமைந்துள்ள மினிகோவிட் கவனிப்பு மையங்களில் மற்ற மருத்துவ முறைகளோடு
இணைந்து ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிக்க அனுமதி
வழங்கவேண்டும்.

மேலும், கொரோனாவின் தீவிர விளைவுகளான மூச்சுதிணறல்,
ஆக்ஸிசன் குறைவு, கருப்பு பூஞ்சைதொற்று போன்றவற்றை வெகுவாக குறைத்து
மக்களின் உயிர்காக்கும் வாய்ப்புகள் இன்னும் அதிகமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here