ஆர்.எஸ்.எஸ். முன்னோடி சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என தற்போது நடந்த மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலின்போது பாஜக கூறிவந்தது. காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே, சாவர்க்கரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு காந்தியை கொல்ல முடிவு செய்ததாக கூறியிருந்தார். எனவே, சாவர்க்கருக்கு விருது என்பது சர்ச்சையை உருவாக்கியது.
இதையடுத்து காங்கிரசை சேர்ந்த மனீஷ் திவாரி எம்பி , பகத்சிங், சுகதேவ், குருதேவுக்கு பாரத ரத்னா வழங்கவேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியும் முன்மொழிந்திருந்தார்.














