தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலிண்டரை தோள்களில் சுமந்து சென்று ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,’கொரோனா ஊரடங்கு நேரத்திலும் வீடு வீடாக சென்று அரசு முன்கள பணியாளர்களாக அறிவித்த மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறை பணியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களின் இல்லங்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யக்கூடிய எங்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், கொரோனா தெற்று பாதித்தவரா இல்லையா என்று தெரியாமல் நாங்களே செல்கின்றோம்.

இப்படிப்பட்ட எங்களுக்கு மாத ஊதியம் இஎஸ்ஐ ஈபிஎப் போன்ற அடிப்படை வசதிகளை செய்து எங்கள் உயிரை பாதுகாக்க உறுதிப்படுத்தி அரசாணை வேண்டும். கொரோனா தோற்றால் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிதி அளிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நடைபெறாத பட்சத்தில் ஜூன் 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்’என்று கூறினர்.













