:
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில், உட்பிரகாரத்தில், வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு உற்சவ மண்டபம், நடராஜர், சின்னக்குமார சுவாமிக்கு , தனி மண்டபம் உள்ளது.
இதில், பள்ளியறை மண்டபம் முழுவதும் நன்கொடையாளர் மூலம் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளி முலாம் பூசிய தகடு பொருத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அற்புத வேலைப்பாடுகளுடன் 54 கிலோ வெள்ளியால் ஆன தகடு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரசித்தி பெற்ற முருகன் கோயில் சன்னதியில்,வெள்ளி தகடு பதிக்கும் பணிக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.











