மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 2ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது அணையில்நீர் மட்டம் 97.18 அடியாக இருக்கிறது. 61.43 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
அணை திறக்கப்படுவதன் மூலம் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள 5.12லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.














