சாத்தூரில் பட்டாசு தயாரித்தபோது விபத்து: பெண்கள் சிறுவன் உட்பட 3 பேர் பலி

0
1055

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள தாயில்பட்டி – கலைஞர் காலனி பகுதியில், இன்று காலை அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக, வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பெண் சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 5 வீடுகள் இடிந்து தரைமட்டமாயின .

சம்பவ இடத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here