நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே கோடீஸ்வரன் நகர் பகுதியில் கடந்த 27ஆம் தேதி சாலை விரிவாக்கப்பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டபோது ஒரு குடிதண்ணீர் குழாய் உடைந்தது.
அதை சரி செய்யாமலே நெடுஞ்சாலைத் துறையினர் சென்று விட்டனர். இந்நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு தொடர்பாக அப்துல் கலாம் லட்சிய இந்தியா இயக்க ஒருங்கிணைப்பாளர் கந்த முருகன் மாநகராட்சியில் மனு அளித்தார்.
புகார் அளித்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும இப்போது வரை பிரச்சனை சரி செய்யப்படவில்லை என அவர் குறை தெரிவித்துள்ளார்.







