கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா, அவருக்கு உறுதுணையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.
இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அருள் வந்து சாமியாடும் நிர்மலா திடீரென நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்தார். அருகில் உள்ளவர்கள் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். பின்னர் பேசிய அவரது வக்கீல், ‘இது பொய் வழக்கு என்று நிரூபிப்போம்’ என்றார்.