கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இதனை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.









