நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள வேம்பையாபுரம் கிராமம் . இந்த கிராமம் வனத்துறையை ஒட்டி உள்ளதால் அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்தவர் மருபாண்டி. இவர் வீட்டில் 15 ஆடுகள் வளர்த்து வருகிறார் . இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டிலில் அடைந்துள்ளார் . இரவில் ஆடுகள் அச்சத்துமன் சத்தம் எழுப்பிய நிலையில் மருதுபாண்டி எழுந்து சென்று பார்த்த போது சிறுத்தை ஒன்று கொட்டகைக்குள் புகுந்து ஆடு ஒன்றை அடித்து தூக்கிச் சென்றதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார் . வனத்துறையினர் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் . அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதே பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு 6 முறை சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








