விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் வசித்து வரும் கண்ணன் என்ற அன்பழகன் வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடித்தது. நல்ல வேளையாக, இந்த நாட்டு வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வருவதற்குள் கண்ணன் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகிவிட்டார்.

இவர் மீது ஏற்கனவே விலங்குகள் வேட்டையாடிய குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவம் குறித்து , வழக்குப்பதிவு செய்த சேத்தூர் ஊரக காவல் துறையினர் தலைமறைவான கண்ணனை தேடி வருகின்றனர்.














