குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்த பேராசிரியை

0
397

அமெரிக்காவில் உள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் ரமடா சிசோகோ. இவர் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் தன்னிடம் கைக்குழந்தை இருப்பதாலும், அதனைக் பார்த்துக்கொள்ள ஆள் இல்லை என்றும் அதனால் வகுப்புக்கு சரிவர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் உங்கள் கைக்குழந்தையுடன் வகுப்புக்கு வாருங்கள் என பேராசிரியர் அனுமதி அளித்துள்ளார். பேராசிரியை அனுமதி அளித்த பிறகு கைக்குழந்தையுடன் வகுப்பிற்குள் கல்லூரி மாணவி வந்தார். இதனையடுத்து குழந்தை கையில் இருந்தால் பாடத்தை கவனிப்பது, எழுதுவது தடையாக இருக்கும் என நினைத்த பேராசிரியை ரமடா, குழந்தையை வாங்கி தன் முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்துள்ளர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரமடாவின் மகள், என் அம்மா தான் என் முன்னுதாரணம். அவரது மாணவியின் குழந்தையை தன் முதுகில் 3 மணி நேரமாக தாங்கிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார்.

இந்த உலகத்தையே தன் மகளைப்போல் பாவிக்கும் அம்மாவை நான் பெற்றிருப்பது என் அதிர்ஷ்டம் என குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவை பலரும் பகிர்ந்து பேராசிரியர் ரமடாவை பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here