பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலை பயின்று வரும் மாணவியிடம் இரவு தோறும் ஆசிரியர்கள் இருவர் கைபேசியில ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் ஜெபஸ்டின் என்பவரை கைது செய்தனர். மற்றொரு பேராசிரியரான பால்ராஜ் தலை மறைவாக உள்ளார். அவரை தேடி வருகின்றனர்.