தென்காசி அருகே விவசாயி வீட்டில் மரநாய்

0
1194

வாசுதேவநல்லூர் பாலச்சந்திர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை(30). விவசாயி. இவரது வீட்டு மாடியில் நேற்று ஒரு மரநாய் பதுங்கியிருந்தது. இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையில் வீரர்கள் கருப்பசாமி, விஸ்வநாதன், முனியாண்டி, ராஜா, மணி வண்ணன் ஆகியோர் 2வயதுடைய அந்த மரநாயை பிடித்து வனத்துறை யினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து புளியங்குடி வனவர் அசோக்குமார் மற்றும் ஊழியர்கள் கூண்டுக்குள் இட்டு, தலையணை பீட் பகுதியில் கொண்டு மரநாயை விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here