ஆயில் கழிவை எரிக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்தால் மூச்சுத் திணறும் வண்ணார்பேட்டை

0
278

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை யில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஆயுள் கசிவுகள் வெளியேறி தாமிரபரணி ஆற்றுக்குள் கலந்து சுத்திகரிக்க முடியாத கழிவாக கலந்தது. இந்நிலையில்பேருந்து பணிமனையின் ஆயில் கழிவுகளையும் எரிப்பதால் ஒரே புகைமூட்டமாக உள்ளது. இதனால், அரசினர் விருந்தினர் இல்லத்தின் பின்பகுதியில் உள்ள போத்தீஸ் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சு விட சிரமப் படுகின்றனர்.

தாமிரபரணியில் எண்ணெய் கழிவுகளை விடக்கூடாது என மாநகராட்சி தடை விதித்த நிலையில் ஆயில் கழிவுகளை எரிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கழிவுகளை அகற்றுவதற்கு மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாத மாற்று வழிகளை போக்குவரத்து கழகம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here