நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சப் இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட பட்டதாரி இளைஞர் கிங்ஸ்லியின் தாயார் அன்ன பெல்சியாள், மற்றொரு இளைஞர் தனசிங்கின் தாய் செல்வக்குமாரி, ஆர்.சி. நந்தன்குளம் ஊர் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட ஊர் மக்கள் நெல்லை கலெக்டர், எஸ்பி, வள்ளியூர் ஏஎஸ்பி ஆகியோரிடம் மனு அளித்தனர்.

அதில், ‘ எங்கள் ஊர் கோவில் வளாகத்துக்குள் செல்போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், காவலர்கள் அண்ணாமலை, தங்கராஜ் மற்றும் ஒருவர் ட்கொடூரமாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற இளைஞர் கிங்ஸ்லியின் தாயாரையும் தாக்கி, அவமதித்துள்ளனர். இறுதியாக எங்கள் ஊர் இளைஞர்கள் மீதே பொய் வழக்குப்போட்டதோடு, செல்போன்களையும் பிடுங்கி வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இளைஞர்கள் மீது போட்ட பொய் வழக்கை வாபஸ் பெறவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் பேசிய வள்லியூர் ஏஎஸ்பி செல்போன்களை திருப்பியளிக்க சம்பதித்ததோடு, வள்ளியூர் இன்ஸ்பெக்டர் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலெக்டரிடம் மனு அளிக்க சென்றவர்களை அவர் பங்களாவுக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக கலெக்டர் உதவியாளர் மனுவை பெற்றுக்கொண்டார்.














