தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையை அடுத்த அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த ஆண் உடலை கைப்பற்றிய பசுவந்தனை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், எரிக்கப்பட்டவர் காமநாயக்கன்பட்டி அருகே குருவிநத்தத்தை சேர்ந்த சரியானசவரிமுத்து மகன் ஞானசேகர்(42) என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில், ஞானசேகரை அவரது மனைவி சலைத்ராணி(38) மற்றும் அவர்களது 15 வயது மகள், அதே ஊரைச்சேர்ந்த சுடலையாண்டி மகன் கருப்பசாமி என்ற கார்த்திக்(24) குடன் சேர்ந்து கொன்றது புலனானது.
கார்த்திக் ஞானசேகரின் மூத்த மகளை காதலித்ததோடு, சலைத்ராணியுடனும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ஞானசேகர் மனைவியையும், மகளையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சலைத்ராணிக்கும் ஞானசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சலைத் ராணி , மூத்த மகள் மற்றும் கார்த்திக்குடன் சேர்ந்து ஞானசேசரை கம்பி, அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலை சாக்கில் மூட்டையாக கட்டி, காரில் ஏற்றி அச்சங்குளம் காட்டுப்பகுதியில் போட்டு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு, கார்த்திக், கலைத்ராணி மற்றும் அவரது மூத்த மகளை கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.







