மதுரை மத்திய சிறையில் மோதல் – பிளேடால் கிழித்து காயம் – கைதிகள் சுவரில் ஏறி போராட்டம்

0
490

மதுரை அரசரடி அருகே புதுஜெயில்ரோடு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 1300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர்.

இங்கு முதல்தள பிரிவில் இருந்த பழைய சிறைவாசிகளுக்கும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறைக்கு வந்த திருச்சியை சேர்ந்த சிறைவாசிகளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட வந்த இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சிறைவாசிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திய சிறைவாசிகள் சிலர் தங்களது உடலில் பிளேடுகளால் காயம் ஏற்படுத்தியதோடு, சிறைச்சாலையில் சுவர்களில் ஏறிநின்று கற்களை சாலைகளை நோக்கி வீசி எறிந்தனர்.

இதையடுத்து சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் தமிழ்செல்வம் இரு தரப்பினரின் மோதலை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். கல்வீச்சில் ஈடுபட்ட சிறைவாசிகளை சிறைத்துறை காவலர்கள் அழைத்துசென்று சிறையில் அடைத்தனர். மோதலில் காயம்பட்டவர்களுக்கு சிறைவளாக மருத்துவர் மூலமாக சிகிச்சை அளித்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை மத்திய சிறையில் அடிப்படை வசதி கோரி சிறைவாசிகள் சிறைச்சாலை சுவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறை வளாகத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது.

சிறைவாசிகள் மோதலை தொடர்ந்து சிறை வாளகத்தை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here