மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கிய அருவியான குற்றாலம் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்தி வனப்பகுதியில் இருக்கும் புலி, காட்டுப்பன்றி, யானை போன்றவை அருவிப்பகுதிக்கு வரத் தொடங்கியிருக்கின்றன.

குற்றாலம் பிரதான அருவிக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் புலி ஒன்று இன்று நடமாடியுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் செல்போனில் படம் எடுத்துள்ளனர் . அது புலியா, சிறுத்தையா என்று வீடியோ காட்சிகள் மற்றும் நடமாடிய பகுதியில் கிடைத்த கால்தடங்களை வைத்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் .















