தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து திருடு போன வண்ணம் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.