முன்னாள் அமைச்சர் தோண்டிய கால்வாய் மூடல், ஒதுக்கிய பணம் எங்கே? தொடங்கியது தேடல்

0
1278

உங்கள் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் நிலோபர் கபில் தோண்டிய கால்வாய் மூடப்பட்டது. அதற்காக ஒதுக்கிய பணம் எங்கே என்பது பெறப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மையப்பகுதியில் ஓடும் பாலாற்றின் கிளை ஆற்றின் அருகே பொதுப்பணித்துறை நீர்வளம் ஆதார துறையின் சார்பில் ரூ 2 கோடி மதிப்பீட்டில் ஷாகிராபாத் முதல் ஜண்டாமேடு வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அப்போது இருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்,வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டு இப்பணியினை தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக பணி நடைபெறாமல் சுமார் 10அடி ஆழத்தில் தோண்டப்பட்ட கால்வாய் கழிவுநீர் மற்றும் மழை நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசுவது உடன் அருகில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் அதன் பேரில் இன்று பெய்த மழையால் சாலை விரிசல் ஏற்பட்டது அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த 2 இறைச்சி கடைகள் சுவர்கள் ஏற்பட்ட து

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர் உடனடியாக இத்தகவலை பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன அருள் அவர்களுக்கு தெரிவித்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் அப்பணியை கைவிட கோரியும் உடனடியாக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் அதன்பேரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் விரைந்து வந்து கால்வாய்களை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

கழிவுநீர் கால்வாய் மூடப்பட்ட நிலையில் அதற்கு ஒதுக்கிய ரூ 2 கோடி எங்கே என்ற தேடுதல் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here