தமிழ்நாட்டோல் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருமளவில் பரவிவருவதால் தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக மருத்துவமனைகள்,தனியாா் அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகாக இறக்குமதி செய்கின்றன.
நேற்று இரவு அமெரிக்கா,சீனா,ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து சென்னை வந்த 3 சரக்கு விமானங்களில் ஆக்ஜிசன் தயாரிக்கும் 52 கருவிகள் வந்திறங்கின.
விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள்,அந்த கருவிகள் அடங்கிய பாா்சல்களுக்கு முன்னுரிமை வழங்கி,உடனடியாக சுங்கச் சோதனைகள் முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா்.
.














