சென்னை அடையாறு துணை ஆணையாளர் விக்ரமன்,தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் தனிப்படை அமைத்து ரெம்டிசிவீரை அதிக விலைக்கு விற்கும் நபர்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டார்.
அதில், உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமை காவலர்கள் வெங்கடேசன் .சங்கர் முதல் நிலை காவலர்கள் சண்முகம், பூர்ண குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்ததில் சிலர் ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து அதன்படி தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சுமார் 800 ரூபாய் மதிப்புள்ள ரெம்டிசிவீரை 25 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பது தெரிய வந்தது .
இந்திரா நகர வாட்டர் டேங்க் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொணடிருந்த 3 நகர்களை சோதனையிட்ட போது 2 ரெம்டிசிவீர் மருந்து பாட்டில்களை மறைத்து வைத்து விற்க முயற்சித்தது தெரிய வந்தது .
அவர்கள் கே.கே நகர் பகுதியை சேர்ந்த மருந்து விற்பணையாளரான ஆதித்யன் ( 24 ), பாரிசில் மருந்து கடை வைதது நடத்தி வரும் பட்டாளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ( 27 ), அயனாவரம் பகுதியை சேர்ந்த ஆயிரம் விளக்கில் உள்ள ஒரு மருந்தகத்தில் வேலை பார்க்கும் சையத் அம்ஜித் ( 38) என்பதும், மூவரும் சேர்ந்து மருந்து பாட்டில்களை திருடி வந்து கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்க முயற்சித்ததும் தெரிய வந்தது .
இதனையடுத்து மூவரையும் கைது செய்த அடையாறு காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 2 ரெம்டிசிவீர் மருந்து பாட்டில்கைளையும் 99000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றி நீதி மனற் காவலுக்கு அனுப்பி வைத்தனர் .











