கொரோனா நோயாளிக்கு இலவச உணவு கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

0
1089

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன் களப்பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கனிமொழி எம்பி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ’தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி முன்களப் பணியாளர்கள், கொரோனா நோயாளிகள் மற்றும் அவருடன் இருப்பவர்களுக்கு தினசரி மூன்று வேளையும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை உணவு சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோயில் நிர்வாகம் சார்பில் 650 பேருக்கும், மதிய உணவு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆயிரம் பேருக்கும், இரவு உணவு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சார்பில் 300 பேருக்கும் வழங்கப்பட உள்ளது. தேவையின் அடிப்படையில் அளவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி மற்றும் அலுவலர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here