தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை இந்திர பிரஸ்தம் தெரு பகுதியில் உயரழுத்த மின்கம்பியில் நின்ற மயில் திடீரென மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீசார் மற்றும் வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர் மயிலை குருமலை காட்டுப்பகுதியில் புதைத்தனர்.








