முதலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆய்வு செய்தார். மருத்துவர் சுமதி சட்டப்பேரவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.
‘மருத்துவமனையில் உள்ள ரோடுகள் பழுதடைந்துள்ளன ஆபரேஷன் தியேட்டர் மிகவும் பழுதாகி உள்ளன சுற்றுப்புற காம்பௌண்ட் சுவர் கட்டி தர வேண்டும்’என்ற கோரிக்கை வைத்தார்.
‘ மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் படுக்கைகள்
தயார் நிலையில் இருப்பதாகவும்,ஆனால் அதை பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார். கொரனா வை தடுப்பதற்காக படுக்கை உள் ளது அதிலே ஆக்சிசன் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை எனவும் கூறினார்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து குறைகள் தீர்க்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தெரிவித்தார்.









