பிறந்த நாள் கொண்டாட்ட பணத்தை கொரோனா நிதிக்கு கொடுத்த சிறுமி

0
1049

தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் மகள் வருண்யாதேவி (8)தூத்துக்குடி அன்னாள் பள்ளியில் 3ஆ ம் வகுப்பு படித்து வருகிறார்.இவருடைய பிறந்த நாளுக்காக செலவுக்காக 2000 ரூபாய் சேர்த்து வைத்துள்ளார்.அதனை கொரனா நிதிக்காக கனிமொழி எம்பியிடம் வழங்கினார்.

இது குறித்து கனிமொழி எம்பி கூறுகையில் ‘ சிறுமி பிறந்த நாள் செலவுக்கு சேர்த்து வைத்திருந்த பணத்தை என்னிடம் அளித்தது என்னை நெகிழ வைத்தது.

இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறார்கள் கொண்ட தமிழகம் இப்பேரிடர் காலத்தை கடந்து புதுமுனைப்போடு வெற்றி நடை போடும் நம்பிக்கையினை எனக்கு அளித்ததது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here