கோவில்பட்டியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் (மார்க்சிஸ்ட்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி பகுதியில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் ரேஷன் கார்டு கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். மனு மீதான அதிகாரிகள் வீடுகள் சொத்து விசாரணை செய்கிறார்கள். பல மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘நீங்கள் புதிய ரேஷன் கார்டு தாலுகா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தமிழக அரசால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
ஆனால், மனுதாரர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்று டிஎஸ்ஓ விடம் கேட்டால் ‘இன்று பிரிண்ட் ஆகவில்லை நாளை வாருங்கள்’ என தினமும் அலைக்கழிக்கின்றனர். புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி வந்து நாலு மாதங்கள் ஆகியும் பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு வழங்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். கோவில்பட்டி பகுதியில் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

அரசு பலன்களை மற்றும் உரிமைகளை பெறுவதற்கு குடும்ப அட்டை அவசியம். ஆகவே தமிழக அரசால் மண்டல தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள புதிய ரேஷன் கார்டை உடனடியாக பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன். தாலுகா அலுவலகத்தில் முன்பு முழக்கங்களை எழுப்பி நகரச் செயலாளர் கே .சீனிவாசன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, முருகன், அந்தோணி செல்வம், பாலசுப்பிரமணியன் ஜானகி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்








