தூத்துக்குடி _ திருச்செந்தூர் சாலையில் உள்ள சிவந்தாகுளம் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேசன் (40)..கப்பல் இன்ஜினியர். இவரும் தூத்துக்குடி பிரையன் நகர் 14வது தெருவைச் சேர்ந்த ஷிப்பிங் மூழியர் விவேக்கும் நண்பர்கள்.
இருவரும் நேற்று மாலை சிவந்தசிவந்தாகுளம் 3ஆவது தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அதை முருகேசன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்கள் 7 பேருடன் நான்கு பைக்குகளில் வந்து முருகேசனை அரிவாளால் வெட்டினார் அதை தடுத்த விவேக்குக்கும் வெட்டு விழுந்தது. இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். கொலைகாரர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இறந்து போன நண்பர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை. முருகேசனின் மனைவி டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார்.








