பேஸ்புக் போன்ற சமூக வலைதள கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தரப்பில் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் நாட்டுக்கு ஆபத்தானதாக மாறி வருகிறது. சமூக வலைதள குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. வழக்குகளை மாற்றுவதா இல்லையா என்பதை விசாரிக்க உள்ளோம்.
சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் செய்திகளுக்கு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மேலும் வழிகாட்டுதல் முறைகளை 3 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.