சென்னை உயர்நீதிமன்றம் தாமாக மேற்கொண்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு பரிந்துரை வழங்கும் வரை தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 5 லட்சம் தடுப்பூசி மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.











